தமிழ்நாடு

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் !

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் !

webteam

கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கடலோர காவல் குழுமம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்யபுரம் முதல் நீரோடி வரை உள்ள 50-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் அலை 3 மீட்டர் உயரத்துக்கு எழும்ப வாய்ப்புள்ளதால் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டுள்ள 500 விசைப்படகுகளும் உடனடியாக கரைக்கு திரும்புமாறு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலோர காவல் குழும போலீசார் கிராமங்கள் தோறும் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 1500க்கும் மேற்பட்ட விசை படகுகளும் 10000 மேற்பட்ட சிறு படகுகளிலும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. மீன் பிடிக்க சென்ற மீனவர்களும் கரைக்கு திரும்பியுள்ளனர்.