volunteers and police PT
தமிழ்நாடு

தேமுதிக அலுவலகத்திற்குள் அனுமதிக்கக்கோரி தொண்டர்கள் வாக்குவாதம்! லேசான தடியடி நடத்திய போலீசார்!

போலிசாருக்கும் தொண்டர்களும் மோதல்: விஜயகாந்தின் அஞ்சலியில் பதற்றம்

PT WEB

உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலமானார். அவருக்கு வயது 71. கட்சித்தொண்டர்கள், ரசிகர்கள், நண்பர்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தேமுதிக அலுவலகம் மற்றும் தீவுத்திடலில் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், அவரது உடலானது கோயம்பேட்டிலிருக்கும் அவரது அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. முன்னதாக அங்கு மக்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கிறது. சிலர் தேமுதிக அலுவலகத்திற்குள் அனுமதிக்க வலியுறுத்தி போலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், போலிசார் அவர்கள் மீது லேசான தடியடி நடத்தினர்.