மோன்தா புயல் நாளை கரையை கடக்கும் என சொல்லப்படும் நிலையில் சென்னையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்தகாற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருவாகியுள்ளது. இப்புயலுக்கு ‘மோன்தா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து சுமார் 420 கிமீ தொலைவில் மையம்கொடிருக்கும் மோன்தா புயல், மணிக்கு 15 கிமீ வேகத்தில் நகர்ந்துவருகிறது..
நாளை மாலை ஆந்திராவின் காக்கிநாடா அருகே கரையை கரையை கடக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ள நிலையில், புயலால் தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திர கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யும் என சொல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் தொடர்மழை இருந்துவரும் நிலையில், சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர்..
மோன்தா புயல் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக, சென்னை மாவட்டத்தில் நாளை (28.10.2025) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.