கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்று காலை முதல் தீவிரமடைந்து கனமழையாக பெய்து வருகிறது. இதனையடுத்து சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி்களுக்கு விடுமுறை அறிவித்து அந்ததந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.