தமிழ்நாடு

நிவர் புயல்: புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை

நிவர் புயல்: புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை

jagadeesh

நிவர் புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

நிவர் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் 1 முதல் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து 470 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், எந்த நேரம் வேண்டுமானாலும் புயலாக மாறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றம் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றும் நாளையும் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.