பிருந்தாவன் பொதுப்பள்ளி - ஆத்தூர்
பிருந்தாவன் பொதுப்பள்ளி - ஆத்தூர் PT
தமிழ்நாடு

ஆத்தூர்: இயற்கை பாதுகாப்பை முன்னிறுத்தி பள்ளி மாணவர்கள் பேரணி! தெரு நாடகம் மூலம் விழிப்புணர்வு!

PT WEB

செங்கல்பட்டு ஆத்தூரில் உள்ள பிருந்தாவன் பொதுப் பள்ளி சார்பில் இன்று 'இயற்கை பாதுகாப்பு' என்ற கருப்பொருளை முன்னிலைப்படுத்தி பள்ளி சிறார்களின் பேரணி நடத்தப்பட்டது. பள்ளியின் துணைத் தலைவர் மயூர் வாமனன் தலைமையில், சிறப்பு விருந்தினர்கள் வார்டு மன்ற உறுப்பினர் ரமேஷ், லயன்ஸ் கிளப்பின் உறுப்பினர் டாக்டர் கருணாநிதி, அதன் மாவட்ட தலைவர் ரமேஷ், தேவராஜன், மண்டல தலைவர் டாக்டர் நாகராஜன் மற்றும் பள்ளி தலைவர்கள் முன்னிலையில் பேரணி துவங்கப்பட்டது.

பிருந்தாவன் பொதுப்பள்ளி - ஆத்தூர்

காலை 9:30 மணிக்கு பேரணி தொடக்க விழா தொடங்கப்பட்டது. வான் மஹோத்சவ் விழாவை கொண்டாடும் வகையில் லயன்ஸ் கிளப் சார்பில் பள்ளிக்கு மரக்கன்றுகள் மற்றும் பூந்தொட்டிகள் வழங்கப்பட்டன. தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியர் வகுப்புத் தலைவர்களுடன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

தெருநாடகம் நடத்தி விழிப்புணர்வு!

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாணவர்கள் குப்பைகளை சரியாக பிரித்தல், தூய்மை மற்றும் இயற்கையை அனைத்து வழிகளிலும் பாதுகாப்பதற்கான உறுதிமொழியை எடுத்துக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் தெரு நாடகம் நடத்தினர்.

பிருந்தாவன் பொதுப்பள்ளி - ஆத்தூர்

பின்னர் மாணவர்கள் குப்பை மேலாண்மை மற்றும் வளங்களை பாதுகாக்கும் முறைகளை எடுத்துரைத்து தெருக்களில் பேரணியாக சென்றனர். மாணவர்களின் இந்த “இயற்கை பாதுகாப்பு” பேரணி பொதுமக்களால் பாராட்டப்பட்டது.