தமிழ்நாடு

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பள்ளி மாணவியும் உயிரிழப்பு

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பள்ளி மாணவியும் உயிரிழப்பு

Rasus

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பள்ளி மாணவி ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் 8 பேரின் விவரம் தெரியவந்துள்ளது. உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயராம், தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த கிளாஸ்டன், சிலோன் காலனியை சேர்ந்த கந்தையா ஆகியோர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். தூத்துக்குடியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு பள்ளி மாணவி வெனிஸ்டா என்பவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தூத்துக்குடி குறுக்குசாலையைச் சேர்ந்த தமிழரசன், மாசிலாமணிபுரத்தை சேர்ந்த சண்முகம், தூத்துக்குடியை சேர்ந்த அந்தோணி செல்வராஜ் ஆகியோரும் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாகி உள்ளனர். மணிராஜ் என்பரும் துப்பாக்கிச் சூட்டில் பலியாகி உள்ளனர். இதனிடையே, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் காரணமாக தூத்துக்குடி -நெல்லை இடையே போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.