தலைமை ஆசிரியர் அடித்ததாகக் கூறி மாணவர் ஒருவர் பள்ளியின் முதல் தளத்திலிருந்து கீழே விழுந்ததால், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பேசின்பிரிட்ஜ், குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வசிக்கும் மாணவர் சந்தோஷ்குமார். அதே பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை நடைபெற்ற சிறப்பு வகுப்பிற்கு சந்தோஷ்குமார் காலதாமதமாகச் சென்றதால் தலைமை ஆசிரியர் அடித்ததாகக் கூறப்படுகிறது. அதில், மனமுடைந்த மாணவர் சந்தோஷ்குமார் முதல் மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார். அதில் படுகாயமடைந்த சந்தோஷ்குமார், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.