சென்னை தி.நகர் பணிமனை வாயிலில் அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழந்தார்.
அரசுப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்த சரண் என்ற மாணவர், சென்னை தி.நகர் பணிமனையில் இருந்து பேருந்து ஒன்றில் பயணம் செய்துள்ளார். வேளச்சேரியைச் சேர்ந்த சரண் படியில் நண்பர்களுடன் தொங்கியபடி பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
(கோப்புப் படம்)
அப்போது, எதிர்பாராத விதமாக சக்கரத்தில் சிக்கி மாணவர் சரண் உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.