கோடை விடுமுறை முடிவுக்கு வந்ததை அடுத்து, தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
கோடை விடுமுறைக்குப் பிறகு, தமிழகத்தில் வழக்கமாக ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட வேண்டிய நிலையில், கடும் வெயிலால் ஜூன் 7-ம் தேதி திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை உட்பட தமிழகத்தின் சில மாவட்டங்கள் தவிர அனைத்து பகுதிகளிலும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
பள்ளிகள் திறந்ததுமே மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இலவசப் பேருந்து பயண அட்டை, சீருடை, கலாணி, புத்தகப்பை உள்ளிட்டவற்றை தாமதமின்றி ஒரு வாரத்துக்குள் விநியோகிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. புது ஆடை, பேக் உள்ளிட்டவற்றுடன் புது வகுப்பிற்கு செல்வதால் மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனிடையே, புதுச்சேரியில் கோடை வெயில் தணியாததால் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 12-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.