மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சா சட்டத்தின் கைது செய்யப்பட்டவர் திடீரென்று உயிரிழந்தார்.
திருச்சி சமயபுரம் அடுத்த சிறுகனூரில், லத்வியான் இவாஞ்சலின் லுத்ரன் சர்ச் பள்ளிக்கூடத்தில் இலவச ஆரம்பள்ளி உள்ளது. இதில் 53 மாணவிகள் படிக்கிறார்கள். உண்டு, உறைவிட பள்ளியான இதில் ஓய்வு பெற்ற ஆசிரியர் தர்மராஜன் (65) தாளாளராக இருந்தார். இவர் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, 5 மாணவிகளின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து தர்மராஜன், போக்சா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் உடல் நிலை சரியில்லாத காரணத்தால், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.