தமிழ்நாடு

பட்டியலினத்துத் தாயொருத்தி தரையில் வீசப்படுவதா? வைரமுத்து கண்டனம்

Veeramani

அவரென்ன மண்புழுவா? தலைவியாய்க் கூட அல்ல. மனுஷியாய் மதிக்க வேண்டாமா? என்று கவிஞர் வைரமுத்து கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கவிஞர் வைரமுத்து “பட்டியலினத்துத் தாயொருத்தி தரையில் வீசப்படுவதா? அவரென்ன மண்புழுவா? தலைவியாய்க் கூட அல்ல... மனுஷியாய் மதிக்க வேண்டாமா? என் வெட்கத்தில் துக்கம் குமிழியிடுகிறது. தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க வேண்டிய துயரங்களுள் இதுவும் ஒன்று” என்று தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் தெற்குதிட்டை ஊராட்சி மன்ற தலைவரான பட்டியலினத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர், அந்த ஊராட்சியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தரையில் அமரவைக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. இதன்காரணமாக தெற்குதிட்டை ஊராட்சி துணைத்தலைவர் மோகன்ராஜ் மற்றும் ஊராட்சி செயலாளர் சிந்துஜா ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.