திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு சாலையில் பள்ளி மாணவர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் படியில் தொங்கியபடி பேருந்தில் பயணிக்கும் பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
வத்தலக்குண்டு சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிராமங்களிலிருந்து வத்தலக்குண்டு மற்றும் பட்டிவீரன்பட்டி பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் சுமார் 100 பேர் ஒரே பேருந்தில் பயணிக்கின்றனர். இந்நிலையில் போதிய இடம் இல்லாத சூழலில் சில மாணவர்கள் ஆபத்தை உணராமல் விபரீதமான முறையில் பேருந்தின் படியில் பயணிக்கின்றனர். பெரும் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழும் முன் கூடுதல் பேருந்துகளை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.