தமிழ்நாடு

கிசான் திட்டத்தில் முறைகேடு: 2 உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட் !

கிசான் திட்டத்தில் முறைகேடு: 2 உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட் !

jagadeesh

விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதையடுத்து கள்ளக்குறிச்சியில் 2 உயரதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் அல்லாதோரும் கிசான் திட்டத்தின் கீழ் முறைகேடாக ஊக்கத் தொகை பெற்ற விவகாரத்தில் இரண்டு உயர் அதிகாரிகள் உட்பட 15 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தியாகதுருகம் வேளாண் உதவி இயக்குநர் அமுதா, ரிஷிவந்தியம் வேளாண் உதவி இயக்குநர் ராஜசேகரன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 7 வட்டார தொழில்நுட்ப ஊழியர்கள், 4 அறுவடை பயிர் பரிசோதகர்கள், 2 கணினி ஆப்பரேட்டர்கள் ஆகியோர் இவ்விவகாரத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கமிஷன் பெற்றுக்கொண்டு விவசாயிகள் அல்லாதோருக்கும் ஆண்டுதோறும் ரூ.6,000 பெற்று தந்தது கள ஆய்வில் தெரியவந்ததையடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.