தமிழ்நாடு

மாணவி அனிதா தற்கொலை வழக்கு - தலைமை வழக்கறிஞர் ஆஜராக வாய்ப்பு

webteam

அரியலூர் மாணவி அனிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்று மீண்டும் தொடர உள்ள நிலையில், தலைமை வழக்கறிஞர் நேரில் ஆஜராவார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

அனிதா மரணத்திற்கு நீதி விசாரணை கோரியும் மாணவி மரணம் தொடர்பாக நடைபெறும் போராட்டங்களுக்கு தடை விதிக்க கோரியும் வழக்கறிஞரான ஜி.எஸ்.மணி வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள், நீட் விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் போராட்டம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தனர், மேலும் அமைதி வழியில் போராட்டம் நடத்த தடையில்லை என்றும் அவர்கள் கூறியிருந்தனர். இதையடுத்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை இன்று ஒத்திவைத்து கடந்த 8ம் தேதி உத்தரவிட்டனர். இதன்தொடர்ச்சியாக இந்த வழக்கில் தமிழக தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் நேரில் ஆஜராகி விளக்கமளிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.