எஸ்ஆர்எம் பல்கலைக்கழக மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்கில் இருந்து பாரிவேந்தரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எஸ்ஆர்எம் பல்கலைக்கழக மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக பணம் பெற்ற மதன், கடந்த ஆண்டு மே மாதம் தலைமறைவனார். அவரை திருப்பூரில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில்தான் சேர்க்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பாரிவேந்தர் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் சிக்ரி, அசோக் பூஷண் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது பாரிவேந்தர் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் பெற்றோர் சார்பாக பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, பாரிவேந்தர் மீதான வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மதன் உள்ளிட்ட பிறர் மீதான விசாரணை தொடரும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.