தமிழ்நாடு

குளத்தின் அருகே ஹாயாக படுத்து இளைப்பாறிய புலி: வனத்துறை எச்சரிக்கை

குளத்தின் அருகே ஹாயாக படுத்து இளைப்பாறிய புலி: வனத்துறை எச்சரிக்கை

webteam

தாளவாடி அருகே குளத்தின் அருகே ஹாயாக படுத்திருந்த புலி. தொந்தரவு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சிறுத்தை, புலி, புள்ளிமான்கள், காட்டெருமை ,செந்நாய் போன்ற வன விலங்குகளின் புகலிமாடக உள்ளது. இயற்கையை ஒன்றி வாழும் வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக சிறுத்தை, புலிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் ஜீரஹள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட பௌத்தூர் அருகே உள்ள ஒரு குளத்தின் அருகே புலி ஒன்று ஹாயாக படுத்திருந்ததை அக்கிராம மக்கள் பார்த்தனர். அப்போது இளைஞர்கள், ஹாயாக இளைப்பாறிய புலியை படம் பிடித்தபோது புலி அசராமல் படுத்திருந்தது.

இதையடுத்து சிறிது நேரத்தில் அது காட்டுக்குள் சென்றது. இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வரைலாகி வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் புலிகள் தங்களது வாழ்விடத்தில் உலாவும்போது அதை படம் எடுப்பது தவறு அதற்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்படும் என எச்சரித்துள்ளனர்.