தமிழ்நாடு

சாத்தனூர் அணையில் உபரிநீர் திறப்பு

சாத்தனூர் அணையில் உபரிநீர் திறப்பு

webteam

சாத்தனூர் அணையில் நீர்மட்டம் உயர்ந்ததை அடுத்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்றிலிருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் நீர்மட்டம் உயர்ந்தது. அணையின் மொத்த உயரம் 119 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 117 அடியாக உயர்ந்ததையடுத்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அப்பகுதிகளிலுள்ள ஏரி, குளங்கள் நிரம்பும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.