தமிழ்நாடு

சசிகுமார் கொலை வழக்கு ! என்.ஐ.ஏ அதிகாரிகள் தங்களை அலைக்கழிப்பதாக புகார்

webteam

சசி குமார் கொலை வழக்கு தொடர்பான விசாரணை என்ற பெயரில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தங்களை அலைக்கழிப்பதோடு பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் வந்து மனு அளித்தனர்.

இந்து முன்னணி பிரமுகர் சசி குமார் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோவை சுப்பிரமணிய பாளையம் பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்டார். சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதில் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கின் பின்னணியில் ஐ.எஸ். ஐ.எஸ் போன்ற பல்வேறு தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்தின் அடிப்படையில், இவ்வழக்கினை தேசிய புலனாய்வு முகமைக்கு இந்தாண்டு பிப்ரவரி மாதம் மாற்றப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கோவையில் 10 க்கும் மேற்பட்டவர்களிடம் தேசிய புலனாய்வு முதன்மை அதிகாரிகள் அவ்வப்போது விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் அலைக்கழிப்பதாகவும், பாதுகாப்பற்ற சூழலை ஏறுபடுத்தி இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் வந்து மனு அளித்தனர். இதனால் கடுமையான மன உளைச்சல் ஏற்படுள்ளதாக தெரிவித்த அவர்கள், என்.ஐ.ஏ அதிகாரிகளின் இந்த செயல்களை தடுக்க கோரியும் வலியுறுத்தியுள்ளனர்.