பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டது உண்மைதான் என கர்நாடக சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் அசோக் கூறியுள்ளார்.
பொதுக்கணக்கு குழு கூட்டத்தில் ஆஜரான சிறைத்துறை கூடுதல் டிஜிபி மேக்ரட், டிஐஜி ரேவண்ணா ஆகியோர் இதைத் தெரிவித்ததாகவும் அசோக் கூறியுள்ளார். சசிகலாவுக்கு டி.வி. வழங்கப்பட்டதும் தனி சமையல் நடைபெற்றதும் அவர் சீருடை அணியாமல் சாதாரண உடையில் இருந்ததும் உண்மை தான் என அதிகாரிகள் கூறியதாக அசோக் தெரிவித்தார். முன்னதாக, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சிறையில் சகல வசதி கொண்ட அறைகளுடன் வண்ண உடைகளில் வலம் வருவது போன்ற வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.