தமிழ்நாடு

துரத்திய இளைஞர்... விருப்பத்தை ஏற்று செல்ஃபி எடுத்துக்கொண்ட சசிகலா (வீடியோ)

துரத்திய இளைஞர்... விருப்பத்தை ஏற்று செல்ஃபி எடுத்துக்கொண்ட சசிகலா (வீடியோ)

webteam

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து தமிழகம் திரும்பியுள்ள சசிகலா இளைஞர் ஒருவரின் விருப்பத்தை ஏற்று செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை முடிந்து வெளியே வந்த சசிகலா பெங்களூருவில் இருந்து தமிழகம் திரும்பியுள்ளார். இதனிடையே சசிகலா அதிமுக கொடியை காரில் பறக்கவிட்டு வருவதற்கு எதிர்ப்பு கிளம்பியது. மேலும், அந்த காரில் இருந்து கொடியும் அகற்றப்பட்டது. இதையடுத்து ஓசூர் ஜூஜூவாடி அருகே அவர் மற்றொரு காருக்கு மாறினார். அந்த காரிலும் அதிமுக கொடி பறக்கிறது. தமிழகத்திற்கு வருகை தந்த சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், சசிகலா காரில் வந்து கொண்டிருந்தபோது இருச்சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த இளைஞர் ஒருவர் காரை வழிமறித்து செல்ஃபி எடுக்க முயன்றார். அவரை சசிகலாவின் ஆதரவாளர்கள் அப்புறப்படுத்த முயன்றனர். பின்னர், சசிகலா அனுமதி வழங்க அந்த இளைஞர் சசிகலாவுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.