தமிழ்நாடு

கூவத்தூர் செல்கிறார் சசிகலா?

கூவத்தூர் செல்கிறார் சசிகலா?

webteam

அதிமுக எம்எல்ஏக்களிடம் ஆலோசனை நடத்த அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா 2ஆவது நாளாக கூவத்தூர் செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவின் சட்டமன்ற குழுத் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டு 8 நாட்களாகியும், ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. இந்த தாமதம் அதிமுகவை பிளவுபடுத்தும் முயற்சியாக இருப்பதாக சசிகலா விமர்சித்திருந்தார். இந்தநிலையில், கூவத்தூர் தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்களை, சசிகலா நேற்று தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, வேறுவழியில் போராட்டம் நடத்த இருப்பதாகத் தெரிவித்தார். இந்தநிலையில், அதிமுக எம்எல்ஏக்களை சந்தித்து 2ஆவது நாளாக சசிகலா ஆலோசனை நடத்த இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.