தமிழ்நாடு

ஆளுநரைச் சந்திக்க சசிகலா திட்டம்

ஆளுநரைச் சந்திக்க சசிகலா திட்டம்

webteam

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று சந்திக்க நேரம் கேட்டுள்ளார்.

அதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டு 9 நாட்களாகியும் ஆட்சியமைக்க ஆளுநர் தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆட்சியமைக்க போதுமான எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பதில் தாமதிப்பது கட்சியைப் பிளவுபடுத்தும் முயற்சி என்று சசிகலா குற்றம்சாட்டியிருந்தார். மேலும், ஆளுநர் தாமதப்படுத்தினால், வேறுவகையான போராட்டங்களை முன்னெடுக்க இருப்பதாகவும், ஓரளவுக்குத் தான் பொறுமையாக இருக்க முடியும் என்றும் சசிகலா கூறியிருந்தார்.

இந்தநிலையில், கூவத்தூர் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்களை இரண்டாவது நாளாக சந்தித்து 5 மணி நேரத்துக்கும் மேலாக நேற்று சசிகலா ஆலோசனை நடத்தினார். இந்தநிலையில் ஆளுநர் வித்தியாசாகர் ராவை இன்று சந்திக்க சசிகலா நேரம் கேட்டுள்ளார்.