தமிழ்நாடு

முதலமைச்சராக நாளை பதவியேற்கும் சசிகலா?.. பதவியேற்பு விழா ஏற்பாடுகள் மும்முரம்

முதலமைச்சராக நாளை பதவியேற்கும் சசிகலா?.. பதவியேற்பு விழா ஏற்பாடுகள் மும்முரம்

webteam

தமிழகத்தின் 12ஆவது முதலமைச்சராக வி.கே. சசிகலா நாளை பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதனால் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சசிகலாவுடன் போயஸ் கார்டன் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். முதலமைச்சர் ஜெயலலிதாவைப் போல சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் சசிகலாவின் பதவியேற்பு விழா நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடந்து வருகிறது. பதவியேற்பு விழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, வேலுமணி உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். இந்தநிலையில், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவித்தார்.