தமிழ்நாடு

ஆட்சியமைக்க உரிமை கோரினார் சசிகலா

ஆட்சியமைக்க உரிமை கோரினார் சசிகலா

Rasus

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மாலை 5 மணியளவில் ஆளுநரைச் சந்தித்தார்.

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். தனக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏ-க்களின் பட்டியலை சசிகலா அப்போது ஆளுநரிடம் வழங்கினார். இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் பழனிச்சாமி, சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பாண்டியராஜன், ஜெயக்குமார், அன்பழகன் உள்ளிட்ட10 அமைச்சர்கள் உடன் இருந்தனர்.

ஆளுநரை சந்திப்பதற்கு முன், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தனக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏ-க்களின் பட்டியலையும் ஜெயலலிதா நினைவிடத்தில் வைத்து சசிகலா மரியாதை செலுத்தினார்.