தமிழ்நாடு

ஓரளவுக்குத்தான் பொறுமை: சசிகலா

ஓரளவுக்குத்தான் பொறுமை: சசிகலா

webteam

ஓரளவுக்குத்தான் பொறுமை.. அதற்கு மேல் அதிமுகவினர் அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டியதைச் செய்வோம் என சசிகலா கூறினார்.

போயஸ் தோட்ட இல்லத்தில் கட்சியினர் மத்தியில் பேசிய அவர், ஜெயலலிதா தற்போதும் நம் மத்தியில் இருக்கிறார் என்றும், அவர் கட்சியில் உள்ள புல்லுறுவிகளை அடையாளம் காட்டுவதாகவும் தெரிவித்தார்.

அதிமுக ஒரு எஃகு கோட்டை என்றும் அதை யாரும் அசைக்க முடியாது என்றும் கூறிய சசிகலா, ஜெயலலிதாவும் நிறையப் போராட்டங்களைச் சந்தித்துத்தான் கட்சியை நடத்தினார் என்று தெரிவித்தார். நமக்கும் தற்போது சோதனை வந்திருக்கிறது என்று கூறிய அவர், வென்று காட்டுவோம் என்றார்.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து கொஞ்சம் அமைதி காக்கிறோம். ஓரளவுக்குத்தான் பொறுமை. அதற்கு மேல் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டியதைச் செய்வோம் என சசிகலா கூறினார்.