அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை செல்லாது என்று அறிவிக்குமாறு தலைமைத் தேர்தல் ஆணையரிடம் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் நேரில் வலியுறுத்தியுள்ளனர்.
மைத்ரேயன் எம்.பி. தலைமையில் அதிமுகவைச் சேர்ந்த எம்.பி.க்களும், பி.ஹெச். பாண்டியன் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை சந்தித்தனர். பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கிய சந்திப்பு, சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. கடந்த டிசம்பர் 29ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டதும், அதில் எடுக்கப்பட்ட முடிவுகளும் செல்லாது என்று அறிவிக்குமாறு மைத்ரேயன் எம்.பி. தலைமையிலான குழுவினர் தேர்தல் ஆணையரிடம் வலியுறுத்தினர்.
தலைமைத் தேர்தல் ஆணையருடனான சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த மைத்ரேயன் தலைமையிலான ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு குழுவினர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டனர்.