தமிழ்நாடு

மக்களுக்காகவே அதிமுக அரசு செயல்படும்: சசிகலா உறுதி

மக்களுக்காகவே அதிமுக அரசு செயல்படும்: சசிகலா உறுதி

webteam

மக்களுக்காகவே அதிமுக தலைமையிலான அரசு செயல்படும் என்று அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலா தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்றக் குழுத் தலைவராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து எம்எல்ஏக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், அதிமுகவின் கொள்கைகளை கட்டிக்காத்து மாநில அரசு செயல்படும். மக்களுக்காகவே அதிமுக தலைமையிலான அரசு செயல்படும். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டார். ஜெயலலிதாவின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டிய கடமை அதிமுகவிற்கு இருக்கிறது என சசிகலா தெரிவித்துள்ளார்.