தமிழ்நாடு

ஆள் கடத்தல் வழக்கு: சசிகலா உறவினர் ராவணன் விடுவிப்பு

ஆள் கடத்தல் வழக்கு: சசிகலா உறவினர் ராவணன் விடுவிப்பு

webteam

ஆள்கடத்தல் வழக்கில் இருந்து சசிகலாவின் உறவினர் ராவணனை விடுவித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்த ரவிக்குமார் என்பவர், ராவணன் தன்னைக் கடத்திக் கொலை மிரட்டல் விடுத்ததாக சிறுமுகை காவல்நிலையத்தில் கடந்த 2012 ஜனவரியில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவுசெய்த சிறுமுகை போலீசார் ராவணன், அவரது கார் டிரைவர் மோகன் ஆகியோரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாராணை கோவை 3ஆவது செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது. இதில் இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட ராவணன் மற்றும் மோகன் ஆகியோரை வழக்கிலிருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.