தமிழ்நாடு

சசிகலா விடுதலை எப்போது ? - கர்நாடக சிறைத்துறை பதில்..!

webteam

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் எனக் கர்நாடக சிறைத்துறை பதிலளித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 2017ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவின் தண்டனை காலம் முடிய இன்னும் 8 மாதங்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் சசிகலாவின் விடுதலை குறித்து பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்துள்ள கர்நாடக சிறைத்துறை, குற்றவாளிகளின் விடுதலை பல்வேறு விதிகளுக்கு உட்பட்டது எனத் தெரிவித்துள்ளது. அத்துடன் அபராதத் தொகை செலுத்தப்படுவதன் அடிப்படையில் விடுதலைத் தேதி மாற்றப்படும் எனக் கூறியுள்ளது. எனவே சசிகலா விடுதலையாகும் தேதியை தற்போது துல்லியமாகத் தெரிவிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது. அதேசமயம் அபராதத் தொகையைச் செலுத்தாவிட்டால் விடுதலைத் தேதி தள்ளிப்போகும் எனப்படுகிறது.