தமிழ்நாடு

தஞ்சையில் 6 இடங்களில் சோதனை நிறைவு

தஞ்சையில் 6 இடங்களில் சோதனை நிறைவு

webteam

தஞ்சையில் ஏழு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வந்த நிலையில், ஆறு இடங்களில் சோதனை நிறைவு பெற்றுள்ளது. மேலும் சோதனை முடிந்து ஆவணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

தஞ்சையில் சசிகலா கணவர் நடராஜன், சசிகலாவின் அண்ணன் மகன் வெங்கடேஷ், மகாதேவன் வீடு, மகாதேவன் தம்பி தங்கமணி, நடராசன் சகோதரி மகன் சின்னையா, வழக்கறிஞர் வேலு கார்த்திகேயன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ராஜேஸ்வரன் வீடு ஆகிய ஏழு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நேற்று காலை தொடங்கியது. சசிகலா கணவர் நடராஜன் மற்றும் அண்ணன் மகன் வெங்கடேஷ், உறவினர்கள் கார்த்திகேயன், தங்கமணி, சின்னையா ஆகிய ஐந்து வீடுகளில் நேற்று இரவு சோதனை முடிந்தது. சசிகலா அண்ணன் மகன் மகாதேவன் மற்றும் முன்னாள் கவுன்சிலர் ராஜேஸ்வரன் இல்லத்தில் இன்று காலை சோதனை தொடங்கியது. இந்நிலையில் மகாதேவன் வீட்டில் சோதனை நிறைவு பெற்றுள்ளது. சோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.