தமிழ்நாடு

சசிகலா பேனருக்கு தீ வைத்த பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்

சசிகலா பேனருக்கு தீ வைத்த பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்

webteam

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் கொளத்துக்கடையில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு வைத்திருந்த பிளக்ஸ் பேனரை ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கிழித்து தீயிட்டுகொளுத்தி தங்களது எதிர்பை தெரிவித்தனர்.

தமிழக அரசியலில் பல திருப்புமுனைகள் நடைபெற்று வரும் நிலையில் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா முதல்வர் பதவியை ஏற்க பலவகையில் தடைகள் நடைபெற்று வரும் சூழலில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியை ராஜினமா செய்யவைத்துள்ளதாக பன்னீர்செல்வம் அறிவித்தார்.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் சசிகலாவை எதிர்த்து பல போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அந்தியூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட கூகலூர் கொளத்துக்கடையில் அதிமுக கட்சியின் சார்பில் பொதுச்செயலாளர் பதவியை ஏற்ற சசிகலாவிற்கு வாழ்த்து தெரிவித்து 40 அடி அளவிலான பிளக்ஸ் பேனர் வைக்கபட்டிருந்தது. அந்த பேனரை ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கிழித்து எரித்தும், சசிகலாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.