அதிமுக கொடி கட்டிய மற்றொரு காரில் தமிழக எல்லைக்கு வந்தடைந்த சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக அதிமுக கொடி பொருத்திய காரில் சசிகலா தமிழகம் வந்த நிலையில், ஓசூர் ஜூஜூவாடி அருகே சசிகலா மற்றொரு காருக்கு மாறினார். அவர் அதுவரை பயணித்த காரில் இருந்து அதிமுக கொடி அகற்றப்பட்டது. அதேசமயம் அவர் மாறிய புது காரில் அதிமுக கொடி பறக்கிறது. தற்போது அதிமுக கொடி பொருந்திய மற்றொரு காரில் சசிகலா தமிழக எல்லையை வந்தடைந்துள்ளார். சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.