தமிழ்நாடு

‌ சசிகலா சீராய்வு மனு மீது இன்று விசாரணை

‌ சசிகலா சீராய்வு மனு மீது இன்று விசாரணை

webteam

சொத்துகுவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. 

பெங்களூரு சிறையிலிருக்கும் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர், உயர்நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரும் சீராய்வு மனுவை, கடந்த ஏப்ரல் மாதம் தாக்கல் செய்தனர். அரசு ஊழியரான ஜெயலலிதா இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், அரசு ஊழியரல்லாத தங்களையும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியாது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் பாலி நரிமன் ஆஜராகி வாதிட்டுள்ளதால், தந்தை வாதிட்ட வழக்கில் மகன் தீர்ப்பளிக்கக்கூடாது என மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்ததால் நீதிபதி ரோஹிண்டன் நரிமன் இந்த வழக்கிலிருந்து விலகினார். எனவே வழக்கின் விசாரணை தள்ளிபோனது. 
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பு சீராய்வு மனு நீதிபதி நவின் சின்ஹா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.