தமிழ்நாடு

சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!

சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!

webteam

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்றதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஈரோடு மாவட்டத்தில் அக்கட்சியின் நிர்வாகிகளில் இருவர் பதவி விலகியுள்ளனர்.

ஈரோடு மாவட்ட அதிமுக மீனவர் அணிச் செயலாளர் ஃபரூக் அலி, ஜெயலலிதா பேரவை நகர இணைச்செயலாளர் கமல் பாட்ஷா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இதற்கிடையில் சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுகவின் ஒரு பிரிவினர் கடலூரில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர் ‌ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் புகைப்படத்தை கைகளில் ஏந்தி போராட்டத்தில் கலந்துகொண்டனர்.