தமிழ்நாடு

ஜவுளிக் கடையில் வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் கொடுத்து வரவேற்கும் சேலை கட்டிய ரோபோ

ஜவுளிக் கடையில் வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் கொடுத்து வரவேற்கும் சேலை கட்டிய ரோபோ

EllusamyKarthik

ஊரெங்கும் கொரோனா பரவி வருவதனால் வணிக ஸ்தானபங்கள் அரசாங்கம் அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி வியாபாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிப்பது, சானிடைசர் பயன்படுத்துவது, முகக்கவசம் பயனப்டுத்துவது, வாடிக்கையாளர்களின் உடல் வெப்ப நிலையை பதிவு செய்து என கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எல்லா இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் இந்த பணிகளை அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் செய்து வரும் நிலையில் தன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் கொடுப்பதற்காக ரோபோ ஒன்றை பயன்படுத்தி வருகிறார் தமிழகத்தை சேர்ந்த ஜவுளிக் கடையின் உரிமையாளர் ஒருவர். 

வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் கொடுப்பதோடு கடையில் உள்ள சேலைகளை காட்சிப்படுத்தும் அலங்கார பொம்மையாகவும் இந்த ரோபோ ‘டூ இன் ஓன்’ சேவை செய்து வருகிறது. 

தற்போது இந்த சேலை கட்டிய ரோபோவின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

‘கொரோனா காலத்தில் சரியாக இந்த ரோபோ தொழில்நுட்பத்தை அந்த கடையின் உரிமையாளர் பயன்படுத்தி வருகிறார்’ என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.