சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பேசி வருகிறார்.
சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையையும் தொகுதி பங்கீடு குறித்தும் பேச தொடங்கிவிட்டனர். திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரஸுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தையை முடித்துவிட்டது.
இதைத்தொடர்ந்து சமத்துவமக்கள் கட்சி ஐஜேகேவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதற்கான அறிவிப்பை சரத்குமார் நேற்று வெளியிட்டார்.
இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பேசி வருகிறார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதிமய்யம் அலுவலகத்தில் கமலஹாசனை சந்தித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சரத்குமாருடன் ஐஜேகே துணைப்பொதுச்செயலாளர் ரவிபாபுவும் சென்றுள்ளார். இதனால் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை கூட்டணி அமைக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.