தமிழ்நாடு

"கோடநாடு விவகாரத்தில் விசாரணை நடத்தக் கோருவதில் தவறில்லை" - சரத்குமார் 

"கோடநாடு விவகாரத்தில் விசாரணை நடத்தக் கோருவதில் தவறில்லை" - சரத்குமார் 

JustinDurai
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தக் கோருவதில் தவறு ஏதும் இல்லை என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் எலந்தங்குடியில் நடந்த விழாவில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் வேண்டாம் என்று கூறியதை வரவேற்பதாக தெரிவித்த சரத்குமார், உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்து மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட இருப்பதாகக் கூறினார்.