தமிழ்நாடு

சமஸ்கிருத உறுதிமொழி: மதுரை அரசு மருத்துவக்கல்லூரி டீன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

Veeramani

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற விவகாரம் தொடர்பாக கல்லூரி டீன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் புதிதாக சேரும் மாணவர்களுக்கும், மருத்துவக் கல்வியை முடித்து மருத்துவ பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கும் வெள்ளை அங்கி அணிவித்து இப்போகிரேடிக் உறுதிமொழி ஏற்க வைப்பது பின்பற்றப்படுகிறது.



அந்த வகையில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி, மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் முன்னிலையில், 250 மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது இப்போகிரேடிக் உறுதிமொழிக்கு பதிலாக மகரிஷி சரக் சப்த் எனும் சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் ஆங்கிலத்தில் சமஸ்கிருத வாக்கியங்கள் இருந்த உறுதிமொழியை தவறுதலாக, மாணவர் சங்க பொதுச்செயலாளர் பதிவிறக்கம் செய்துவிட்டதாக மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேல் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில், அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.



மேலும் தன்னிச்சையாக விதிமுறையை மீறி சமஸ்கிருத உறுதிமொழி எடுக்க வைத்தது குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தவும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில அறிவை வளர்க்க சொந்த முயற்சியில் ஆய்வகம் அமைத்த ஆசிரியர்!