தமிழ்நாடு

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பேனர்ஜி?

webteam

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பேனர்ஜியை நியமிக்க கொலீஜியம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹியின் பதவிகாலம் டிசம்பர் 31 ஆம் தேதியோடு முடிவடைகிறது. ஒடிஷா, தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி புகார் அனுப்பியதாக கூறப்படும் நிலையில், ஆந்திர உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த மகேஸ்வரி சிக்கிம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.கே.கோசுவாமி, ஆந்திர உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பேனர்ஜியை நியமிக்க கொலீஜியம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.