கரூர் மாவட்டத்தின் இருவேறு இடங்களில் அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 15 லாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.
காவிரியாற்றில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பல இடங்களில் மணல் திருட்டு நடைபெறுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். தகவலறிந்து சென்ற செம்மடை வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோது, லாரி ஓட்டுநர்கள் மீது கிராம மக்கள் சிலர் தாக்குதல் நடத்தினர். லாரிகளை பறிமுதல் செய்த கரூர் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இதேபோல், திருச்சி வையம்பட்டி அருகே மூடப்பட்ட குவாரியில் இருந்து கிரஷர் மண் ஏற்றிய வாகனங்களை சிறைப்பிடித்து மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.