ஆ.ராசா pt desk
தமிழ்நாடு

"சனாதனம் என்பது கொடிய எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி வைரஸ் போன்றது" - ஆ.ராசா பேச்சு

பிறப்பால், சாதியால் யாரும் உயர்ந்தவர்களும் அல்ல, தாழ்ந்தவர்களும் அல்ல. மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் நாட்டு மக்களை பிளவுபடுத்துவோரை எதிர்க்கும் மாபெரும் ஒரே சக்தியாக திமுக திகழ்வதாக ஆ.ராசா பேசினார்

webteam

நீலகிரி மாவட்ட திமுக வாக்குச்சாவடிகள் நிலை முகவர்கள் கூட்டம் உதகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், திமுக துணை பொதுச் செயலாளரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கலந்துகொண்டு பேசினார். அப்போது...

agent meeting

சனாதனம் என்பது எச்.ஐ.வி போன்றது. பிறப்பால், சாதியால் யாரும் உயர்ந்தவர்களும் அல்ல. தாழ்ந்தவர்களும் அல்ல. மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் நாட்டு மக்களை பிளவுபடுத்துவோரை எதிர்க்கும் ஒரே சக்தியாக தி.மு.க இருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின் கழகத்தின் இளைஞரணி செயலாளராகவும், அமைச்சராகவும் பொறுப்பேற்றபோது ஏற்பட்ட மகிழ்ச்சியைவிட டெங்கு, மலேரியா போன்ற நச்சுக் கிருமிகளுடன் சனாதனத்தை ஒப்பிட்டு, இதை ஒழிக்க வேண்டும் என தெரிவித்த கருத்தைக் கேட்டு மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன். இந்த சிந்தனை போதும், இன்னும் நூற்றாண்டுகளைக் கடந்தும் இந்த இயக்கமும் தத்துவமும் தழைக்கும்.

udayanithi

உண்மையில் சொல்லப்போனால் சனாதனம் என்பது கொடிய எய்ட்ஸ் நோயை உருவாக்கும், எச்.ஐ.வி வைரஸை போன்றது. பாரபட்சமின்றி ஒழித்துக்கட்ட வேண்டும்" என்றார்.