செய்தியாளர்: ஆர்.ரவி
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் பனை ஏரி உள்ளது. இப்போது பொதுபணித் துறைக்குச் சொந்தமான ஏரியில் ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏரியில் அதிக அளவில் தண்ணீர் உள்ளது. இந்நிலையில், ஏரியில் பெண் சடலம் மிதப்பதாக ஏத்தாப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்
இதையடுத்து பொதுமக்கள் உதவியோடு பெண்ணின் சடலத்தை மீட்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் தென்னம்பிள்ளையூரைச் சேர்ந்த சேகர் என்பவர் மனைவி மீனாட்சி என்பது தெரியவந்தது. மேலும் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.