தமிழ்நாடு

‘சேலம் டு சென்னை’ எட்டு வழிச்சாலை வழக்கு - நாளை தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்

webteam

சேலம் சென்னை எட்டு வழிச்சாலை வழக்கில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தில், சுற்றுசூழல் முன்னனுமதி தரவில்லை என்று கூறி விவசாய சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டப் பலரின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி இந்தத்திட்டத்திற்கு இடைக்காலத்தடை விதித்தது. மேலும் கையகப்படுத்த நிலைத்தை 8 வார காலத்திற்குள் திருப்பி அளிக்கவும் உத்தரவிட்டது.

இந்நிலையில் திட்ட மேலாளர் தலைமையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில், இந்த வழக்கிற்கான தீர்ப்பானது நாளை வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.