செய்தியாளர்: S.மோகன்ராஜ்
சேலம் வீராணம் அருகே இயங்கி வந்த ஸ்கேன் மையத்தில் கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கூறி வந்துள்ளனர். இதையடுத்து கடந்த ஒன்றாம் தேதி ஸ்கேன் மையத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதுதொடர்பாக அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முத்தமிழ் உள்ளிட்ட ஒன்பது பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் ஸ்கேன் மையத்தை நடத்தி சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்ததாக அரசு செவிலியர் கலைமணி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.