செய்தியாளர்: ஆர்.ரவி
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள இலுப்பநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவர், அரசு மதுபான பாட்டில்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இவர், வீரகனூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் எஸ்.ஐ., கருப்பண்ணன் என்பவரிடம் போனில் பேசும் வீடியோ வைரலானது. அதில், 30 பாட்டில்கள் மட்டும் ஓடுவதால் ஒன்றும் கட்டுபடியாகவில்லை.
1500 ரூபாய் கொடுப்பதாக கூறுகிறார். அதற்கு மறுமுனையில் பேசும் எஸ்ஐ கருப்பண்ணன் வழக்கு சம்பந்தமாக கம்ப்யூட்டர் உள்ளிட்டவைகளுக்கு 2,500 பணம் கேட்பதாக கூறுகிறார். இது குறித்த உரையாடல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வீரகனூர் காவல் நிலைய எஸ்.ஐ கருப்பண்ணன் சேலம் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
இதைத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், எஸ்.ஐ., கருப்பண்ணன் பேசிய ஆடியோ உறுதியானது. இதையடுத்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல், எஸ்.ஐ கருப்பண்ணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.