பொதுமக்கள் தர்ணா pt desk
தமிழ்நாடு

சேலம் | பணத்தை வாங்கிக் கொண்டு அடகு வைத்த நகையை திரும்பித் தரவில்லை என பொதுமக்கள் தர்ணா

ஓமலூரில் நகை அடகு நிறுவனத்தை முற்றுகையிட்டு, 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வைத்த நகையை மீட்க பணம் கட்டியவர்களுக்கு நகையையும் பணத்தையும் கொடுக்காமல் ஏமாற்றுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: தங்கராஜூ

சேலம் மாவட்டம் ஓமலூரில் தனியார் நகை கடன் நிறுவனத்தை, 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். அங்கு அடகு வைத்த நகையை, மீட்பதற்காக செலுத்திய பணத்தை பெற்றுக் கொண்டு, நகையை கொடுக்க வில்லை. நகை கொடுக்கா விட்டாலும் பரவாயில்லை, கட்டிய பணத்தை கொடுக்குமாறு கேட்டபோது கொடுக்காமல் மிரட்டியதாகக் கூறி 100-க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், விசாரணை நடத்தினர். விசாரணையில், இங்கு அடகு வைத்த நகை, வேறு அடகு கடையில் அடகு வைத்திருப்பதாகவும், அந்த நகைக்கும், பணத்திற்கும் தங்கள் பொறுப்பிள்ளை என்று நிறுவன அலுவலர் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து இன்று மாலைக்குள் நகை அல்லது பணத்தை கொடுப்பதாக எழுதிக் கொடுத்ததால் மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.