காவலர் சஸ்பெண்ட் pt desk
தமிழ்நாடு

சேலம்: மதுபோதையில் பெண்ணிடம் அத்துமீறியதாக கைது செய்யப்பட்ட காவலர் சஸ்பெண்ட்

சேலத்தில் மதுபோதையில் பெண்ணிடம் அத்துமீறியதாக காவலர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

PT WEB

செய்தியாளர்: S.மோகன்ராஜ்

சேலம் மாவட்டம் ஓமலூர் குற்றப்பிரிவில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்தவர் கலையரசன். இவர் நேற்று முன்தினம் இரவு மத்திய பேருந்து நிலையத்தில், பெண் ஒருவரின் கையைப்பிடித்து இழுத்து அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து கலையரசன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த பள்ளப்பட்டி போலீசார் கலையரசனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

காவலர் சஸ்பெண்ட்

இந்நிலையில், கலையரசனை பணியிடை நீக்கம் செய்து சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். சிறப்பான பணிக்காக கடந்த ஆண்டு குடியரசு தின பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்ற கலையரசன் மது போதையால் தண்டனைக்குள்ளாகி இருப்பது காவல் துறையினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.