தமிழ்நாடு

சேலம்: குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

சேலம்: குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

kaleelrahman

சேலத்தில் கள்ளசாராயம் மற்றும் மதுபான கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்பட்டன.

ஏற்காடு, ஆத்தூர், மேட்டூர், கருமந்துறை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கள்ளசாராயம் மற்றும் மதுபானம் கடத்தல் சம்பவங்களில் ஏராளமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு பிரிவினர் சார்பில் பறிமுதல் செய்யப்பட்ட இந்த வாகனங்கள் அனைத்தும் சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட்டன.

இதில், 6 நான்கு சக்கர வாகனங்கள், 97 இரு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட்ட நிலையில் 23 லட்சத்து 15 ஆயிரத்து 750 ரூபாய் அரசுக்கு வருவாயாக கிடைத்ததாக மாவட்ட காவல் துறையினர் தெரிவித்தனர்.