செய்தியாளர்: S.மோகன்;ராஜ்
சேலம் மத்திய சிறை உதவி சிறை அலுவலராக பணியாற்றி வந்தவர் ரிஷிகேஷ் வைகுந்த் சிங். இவர், நேற்று முன்தினம் மதுரையில் இருந்து மாறுதலாகி சேலத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் மேட்டூரைச் சேர்ந்த கைதி ஒருவரை சிறை கட்டுப்பாட்டிற்கு மாற்றம் செய்யும் பணிக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு கால் உடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த கைதியிடம் காவல்துறை அடித்ததாக கூறுமாறும், அப்படி கூறினால் அரசு நிவாரணம் பெற்றுத் தருகிறேன் என்றும் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அருகிலிருந்த மேட்டூர் காவல் ஆய்வாளர் இதனை செல்போனில் பதிவு செய்து சிறைத்துறையினருக்கு அனுப்பியுள்ளாார்.
இதனையடுத்து, காவல்துறையினர் மீது அவதூறு பரப்பும் விதமாக ஆலோசனை வழங்கிய உதவி சிறை அலுவலர் ரிஷிகேஷ் வைகுந்த் சிங்கை பணியிடை நீக்கம் செய்து சிறை கண்காணிப்பாளர் வினோத் உத்தரவிட்டார். இந்த சம்பவம் சிறை துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.